30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கர்நாடக அரசு மரியாதையுடன் இசையரசி எஸ்.ஜானகி உடல் தகனம்

Date:

மறைந்த பிரபல பின்​னணி பாடகி எஸ்​.ஜானகி​யின் உடல், கர்​நாடக அரசின் முழு அரசு மரி​யாதை​யுடன் மைசூரு​வில் உள்ள பண்​ணைத் தோட்​டத்​தில் தகனம் செய்​யப்​பட்​டது.

பிரபல பின்​னணிப் பாடகி எஸ்​.ஜானகி, மைசூரு​வில் நேற்​று​முன்​தினம் கால​மா​னார். அவருக்கு வயது 88. ஆந்​திர மாநிலம் குண்​டூர் மாவட்​டம் ரெபால்லி அரு​கிலுள்ள பல்​லப்​பட்டா கிராமத்​தில் 1938ஆம் ஆண்டு பிறந்த ஜானகி, தனது 19 வது வயதிலேயே திரைத்​துறைக்கு வந்​து​விட்​டார். சுமார் 60 ஆண்டு கால​மாக, 48 ஆயிரத்​துக்​கும் அதி​க​மான பாடல்​களைப் பாடி சாதனை படைத்​துள்​ளார். தெலுங்​கு, தமிழ், கன்​னடம், மலை​யாளம், இந்​தி, ஒடி​யா, துளு, உருது, சிங்​களம் உட்பட 20 மொழிகளில் பாடி சாதனை படைத்​தவர். கான கோகிலா, தென்​னிந்​தி​யா​வின் நைட்​டிங்​கேல், இசையரசி என்​றும் புகழப்​படு​பவர் ஜானகி.

கே.​வி.ம​காதேவன், கண்​ட​சாலா, எம்​.எஸ்​.​விஸ்​வ​நாதன் – ராமமூர்த்​தி, ஜிகே வெங்​கடேஷ், இளை​ய​ராஜா, தேவா, ஏ.ஆர்​.ரஹ்​மான் என பல்​வேறு இசையமைப்​பாளர்​களின் இசை​யில் பாடி​யுள்​ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பக்​திப் பாடல்​களை எழுதி இசையமைத்​துப் பாடி​யுள்ள எஸ்​.ஜானகி, ‘மவுனப் போராட்​டம்’ என்ற தெலுங்​குப் படத்​துக்கு இசையமைத்​துள்​ளார்.

குழந்​தை​யாக​வும் பாட்​டி​யாக​வும் ஆண் குரலிலும் அரு​மை​யாகப் பாடி ஜாலங்​கள் நிகழ்த்​திய இவர், 4 முறை தேசிய விருதுகளைப் பெற்​றுள்​ளார். கடந்த 1977இல் ‘16 வயதினிலே’ படத்​தில் ‘செந்​தூரப் பூவே’ பாடலுக்​காக​வும், 1981இல் ‘ஒப்​போல்’ மலை​யாளப் படத்​துக்​காக ‘எட்​டுமனூரம்​பலத்​தில்’ பாடலுக்​காக​வும், 1984இல் ‘சி​தா​ரா’ தெலுங்​குப் படத்​துக்​காக ‘வெண்​ணல்லோ கோதாரி அந்​தம்’ பாடலுக்​காக​வும், 1992இல் ‘தேவர் மகன்’ படத்​தில் ‘இஞ்சி இடுப்​பழ​கா’ பாடலுக்​காக​வும் தேசிய விருதுகளைப் பெற்​றுள்​ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு சினி​மா​வில் இருந்து வில​கிய எஸ்​.ஜானகி, மகனுடன் மைசூரு​வில் வசித்து வந்​தார். அவரது கணவர் வி.​ராம்​பிர​சாத் 1997ஆம் ஆண்டு கால​மா​னார். அவரது ஒரே மகனான முரளி கிருஷ்ணா, கடந்த ஜனவரி​யில் உடல்​நலக் குறைவு காரண​மாகக் கால​மா​னார். இது ஜானகிக்கு மிகுந்த மன வருத்​தத்​தைக் கொடுத்​தது. அந்த கவலை காரண​மாக ஜானகி​யின் உடல் நிலை பாதிக்​கப்​பட்​டது. கடந்த சில மாதங்​களாகவே அவர் உடல்​நலக் குறை​வால் அவதிப்பட்டு வந்​தார். நேற்​று​முன்​தினம் அவர் உடல் நிலை மேலும் மோச​மானதை அடுத்​து, அங்​குள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்​டும் மாரடைப்பு ஏற்​பட்​டுக் கால​மா​னார்.

தென்​னிந்​திய பாடகி​களில் தனக்​கென தனி அடை​யாளத்​தைக் கொண்​டிருந்த ஜானகி​யின் மறைவு அவரது ரசிகர்​களைச் சோகத்​தில் ஆழ்த்​தி​யுள்ளது. அவர் மறைவுக்​குக் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, பிரதமர் மோடி, தமிழக முதல்​வர் விஜய், கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவ​கு​மார், திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின், இசை அமைப்​பாளர் இளை​ய​ராஜா, பாடகி பி.சுசீலா உட்பட பல அரசி​யல் மற்​றும் திரை​யுல​கினர் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

மறைந்த எஸ்​.ஜானகி​யின் உடல், மைசூரு மகா​ராஜா கல்​லூரி மைதானத்​தில் பொது​மக்​கள் அஞ்​சலிக்​காக நேற்று காலை 8 மணி​யள​வில் வைக்​கப்​பட்​டது.

அங்கு பொது​மக்​கள், பாடகர்​கள், பாடகி​கள், அரசி​யல் பிர​முகர்​கள், ரசிகர்​கள் உட்பட ஏராள​மானோர் அஞ்​சலி செலுத்​தினர். பின்​னர் பிற்​பகல் 3 மணி​யள​வில் அலங்​கரிக்​கப்​பட்ட வாக​னத்​தில் எஸ்​.ஜானகி​யின் உடல் ஊர்​வல​மாக, கனியனஹண்​டி​யில் உள்ள அவரது பண்​ணைத் தோட்​டத்​துக்​குக் கொண்டு செல்​லப்​பட்​டது. அங்கு அவரது குடும்​பத்​தினர் இறு​திச் சடங்​கு​களைச் செய்​தனர். கர்​நாடக அரசு சார்​பில் அமைச்​சர்​கள் மலர் வளை​யம் வைத்து மரி​யாதை செலுத்​தினர்.

அதைத் தொடர்ந்து 30 குண்​டு​கள் முழங்க, அரசு சார்​பில் இறுதி அஞ்​சலி செலுத்​தப்​பட்​டது. பின்​னர் அவரது உடல் உறவினர்​கள் சூழ, தகனம் செய்​யப்​பட்​டது. அவரது பேத்தி அப்​சரா வைத்​யுலா இறு​திச் சடங்​கு​களைச் செய்​தார். கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கூறும்போது, ‘‘கன்னட திரையுலகினருடன் ஆலோசனை நடத்திய பிறகு, மறைந்த பாடகி எஸ்.ஜானகிக்கு நினைவுச் சின்னம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

ஆறு தமிழ் கட்சிகள் முக்கிய விடயங்களில் ஒருமித்து செயற்பட திட்டம்

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்களில் இணைந்து...

நீர்கொழும்பு சிறை விசாரணையில் பல மர்மங்கள்

6ஆம் திகதி நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது 8 சிறைச்சாலை...

டெங்கு அபாயத்திலிருந்து மீள்கிறது கொழும்பு பல்கலைக்கழக அழகியல் பீடம்

டெங்கு பரவல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருந்த கொழும்பு அழகியல் பல்கலைக்கழகத்தை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்