ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் காலமானார்

Date:

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், சென்னையில் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

சிவகங்கையை சேர்ந்த அவருக்கு இளம் வயதில் போட்டோகிராஃபி மீது ஆர்வம் வந்துள்ளது. அதன் பின்னர் சினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார்.

பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த 2007-ல் வெளியான ‘கல்லூரி’ படம் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.

தொடர்ந்து ரெட்டைச்சுழி, மகிழ்ச்சி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.

குறும்படங்கள் மற்றும் ஆவணப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த 2017-ல் டூலெட் படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கி இருந்தார். இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. கொல்கத்தா சர்வதேச பட விழாவில் இந்தியாவின் சிறந்த படத்துக்கான விருதையும் டூலெட் வென்றது.

‘விரும்பித் தேர்ந்தெடுத்து இப்போதும் நான் ரசித்து ஈடுபடக்கூடிய ஒன்றாகவே ஒளிப்பதிவு இருக்கிறது’ என்று ‘இந்து தமிழ் திசை’-க்கு அளித்த பேட்டியில் தனது தொழில் மீதான நேசத்தை ஒளிப்பதிவாளர் செழியன் வெளிப்படுத்தி இருந்தார். அவர் எழுதிய தொடர் ‘உலக சினிமா’ என்ற புத்தகமாக வெளியாகி உள்ளது.

இந்நிலையில், சென்னை தரமணியில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (ஜூலை 10) காலை அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஓமானிலிருந்து ‘தூக்கி வரப்பட்ட’ பிரபல குண்டர் தலைவன்!

மட்டக்குளியில் பல கொலைகள் மற்றும் கொலை முயற்சிகளில் ஈடுபட்ட, குறிப்பாக சஞ்சீவ...

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்