நீர்கொழும்பில் இருந்து இராணுவ பாதுகாப்புடன் மட்டு சிறைக்கு 60 கைதிகள் அழைத்துவரப்பட்டனர் -மட்டு சிறையில் 1020 கைதிகள்

Date:

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இராணுவம்   விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு 60 கைதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (07) மாலை 6.00 மணிக்கு அழைத்து வரப்பட்டு சிறைச்சாலை அத்தியட்சகர்  இந்திக்க ரங்கண பெரேராவிடம் ஒப்படைத்துள்ளதுடன் பொலன்னறுவை சிறைச்சாலைக்கு 63 பேர் கொண்டுவரப்பட்டு ஒப்படைத்துள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்குள் இடம் பெற்ற மோதலையடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் 5 பேர் உட்பட 25 பேர் உயிரிழந்ததுடன் 100 பேர் வரை படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து அங்கிருந்த 60 கைதிகளை இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டதையடுத்து  சிறைச்சாலை பகுதியை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை 400 கைதிகள் பராமரிக்க கூடிய மட்டக்களப்பு சிறைச்சாலையில் 960 கைதிகள் பல இடநெருக்கடிகளுக்குள் இருந்து வரும் நிலையில் மேலும் நீர்கொழும்பு சிறையில் இருந்து 60 கைதிகள் கொண்டு வரப்பட்டதையடுத்து  ஆயிரத்து 20 கைதிகள் (1020) சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

அதேவேளை பொலன்னறுவை சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்புடன் 63 கைதிகள் அழைத்துவரப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் தீ விபத்துகளை தடுக்க தீயணைப்பு சிலிண்டர் கருவிகள் பொருத்துவது கட்டாயம் மாநகர சபை முதல்வர் அதிரடி உத்தரவு

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள், தங்குமிடங்கள்...

சுகீஷ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி Gotabaya Rajapaksaவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஷ்வர லெனின்...

16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை

16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதைத் தடைசெய்ய அல்லது கட்டுப்படுத்தும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்