கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்றுக்கு கசிப்பு கடத்திய இருவர் 800 லீற்றர் கசிப்புடன் கைது

Date:

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்று பிரதேசத்திற்கு வாவி ஊடாக தோணியில் கசிப்பு கடத்தி வந்த இருவரை மண்முனைபற்று வாவிக்கரையில் வைத்து இன்று புதன்கிழமை (08)  800 லீற்றர் கசிப்புடன் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்

காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அந்த பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தவராஜா றஜீவ்காந்தன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பகுதியில் சம்பவ தினமான இன்று பகல் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்

இதன்போது அங்கு தோணில் கடத்தி கொண்டுவரப்பட்ட வாவிக்கரையில் வைக்கப்பட்ட கசிப்பை எடுத்துச் செல்ல வந்த இருவரை 800 லீற்றர் கசிப்புடன் கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்டவர்கள் 25,26 வயதுடையவர்கள் எனவும் கொக்கட்டிச்சோலை முனைக்காடு மற்றும் மாவிலங்குதுறை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.;

spot_imgspot_img

More like this
Related

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...

ஈரானை குறிவைத்து புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா

ஹோர்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை ஈரான் மீண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்