வாழைச்சேனையில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற ஆண் ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு

Date:

வாழைச்சேனை சுங்காங்கேணி குளத்தில் மீன்பிடிக்க சென்ற  ஆண் ஒருவர் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (7) பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

சுங்காங்கேணி  சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய தம்பிராசா மகேந்திரகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

வாழைச்சேனை நீதிமன்றத்துக்கு அருகாமையில் உள்ள சுங்காங்கேணி தாமரைக்குளத்தில் மீன்பிடிப்பதற்காக நேற்று திங்கட்கிழமை குளத்தில் வலையை வீசி விட்டு வீடு திரும்பியவர் சம்பவ தினமான இன்று செவ்வாய்க்கிழமை காலையில் சென்று வீசிய வலை மீட்டு மீனை பிடிப்பதற்காக சென்றவர் பகல் ஆகியும் வீடு தீரம்பாததையடுத்து உறவினர்கள் தேடிச் சென்றுள்ளனர்.

இதன் போது குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக இருப்பதை கண்டு பொலிசாருக்கு தெரிவித்ததை அடுத்து பொலிசார் சடலத்தை மீட்டதுடன் குறித்த நபருக்கு வலிப்பு  நோய் இருப்பதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மாவடிப்பள்ளி அல் அஸ்ரப் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.ஏ. அஸ்தர் கடமையேற்பு

சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றிய அதிபர் சேவையைச் சேர்ந்த...

துமிந்த சில்வா மீதான குற்றப்பத்திரம் கையளிப்பு

ஹவ்லொக் சிட்டி எலிபேங்க் அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட T-56...

துன்னாலையில் இளைஞன் வெட்டிக்கொலை!

பருத்தித்துறை - துன்னாலையில் நேற்று (09) இரவு ஒருவர் வெட்டிக் கொலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்