காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவரை கொன்றது எப்படி? – போலீஸாரிடம் நடித்துக் காட்டிய சியா கோயல்

Date:

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்​டேட் தொழில​திபர் கேத்​தன் அகர்​வால் (26). இவருக்​கும் சியா கோயல் (20) என்ற இளம்​ பெண்​ணுக்​கும் திரு​மணம் நிச்சயிக்கப்பட்​டது. ஆனால், தனது காதலன் சேத்தன் சவுத்ரியுடன் சேர்ந்து கடந்த ஜூன் 18-ம் தேதி லோஹா​காட் கோட்டை மலை உச்​சியி​லிருந்து கேத்தனை கீழே தள்​ளிப் படுகொலை செய்​தார்.

இதுகுறித்து புனே ஊரகக் காவல் கண்​காணிப்​பாளர் சந்​தீப் சிங் கில் கூறிய​தாவது: “சியா கோயல் மற்​றும் சேத்​தன் சவுத்ரி ஆகிய இரு​வரை​யும் லோஹா​காட் கோட்​டை​யில் கொலை நடந்த இடத்திற்கு அழைத்​துச் சென்று விசா​ரணை நடத்​தினோம். அவர்கள் எந்​தப் பாதை வழி​யாகக் கோட்​டைக்கு வந்​தனர், சம்பவத்​தன்று எந்​தெந்த இடங்​களில் நின்று கொண்​டிருந்​தனர், கேத்​தனை எவ்​வாறு கீழே தள்​ளினர் என்​பது போன்ற அனைத்து நிகழ்​வு​களும் அச்சு அசலாக அவர்​கள் நடித்​துக் காட்​டினர்.

பாது​காப்பு காரணங்​களுக்​காக இந்த மறு உரு​வாக்க நடவடிக்கையின் போது லோஹா​காட் கோட்​டைக்கு பொது​ மக்களின் வருகை தற்​காலிக​மாகத் தடை செய்​யப்​பட்​டிருந்​தது. இந்த ஒட்​டுமொத்த விசா​ரணை​யும் முழு​மை​யாக வீடியோ பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு சந்​தீப் சிங் கில் கூறி​னார்.

காவல்​துறை வட்​டாரங்​கள் கூறுகை​யில், “கோட்​டை​யில் கேத்தனுடன் சியா கோயல் சென்​ற​போது, பின் தொடர்ந்த காதலன் சேத்​தனுக்கு சியா ஏதோ ஒரு ரகசிய சிக்​னல் கொடுத்துள்​ளார். அதன் பிறகே இரு​வரும் சேர்ந்து கேத்​தனைத் மலை உச்​சியி​லிருந்து கீழே தள்ளி கொலை செய்​துள்​ளனர். சேத்தன் சவுத்ரி கோட்​டைக்கு நுழைவுக் கட்​ட​ணம் ஏது​மின்றி ரகசி​ய​மாக நுழைந்​துள்​ளார்” என்று தெரி​வித்​தன.

spot_imgspot_img

More like this
Related

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...

ஈரானை குறிவைத்து புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா

ஹோர்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை ஈரான் மீண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்