முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சல்லே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயவியல் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதய நோய் தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.