புகையிரதம் மோதி இராணுவச்சிப்பாய் பலி

Date:

யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி, இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நிரோஷன் லக்மால் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இராணுவ சிப்பாய் விடுமுறையில் வீட்டுக்கு சென்ற நிலையில், விடுமுறை காலம் முடிவடைந்த பின்னரும் நீண்ட காலம் கடமைக்கு திரும்பாது, இன்றையதினம் மீண்டும் கடமைக்கு திரும்பிய வேளை பலாலி இராணுவ அதிகாரிகள் நீண்ட காலம் கடமைக்கு திரும்பாதமை குறித்து, கொழும்பில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு சென்று விளக்கம் கொடுக்குமாறு பணித்த நிலையில் சிப்பாய் பலாலியில் இருந்து வெளியேறிய நிலையில் அரியாலை நெளுக்குளம் பகுதியில் புகையிரத்துடன் மோதி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண நகரில் இலங்கைப் படையினர் சோள வியாபாரம் – சொந்த நிலத்திற்கு செல்ல முடியாமல் வலி வடக்கு மக்கள் அவதி!

​யாழ்ப்பாண நகரில்  சோள வியாபார நடவடிக்கைகளில் இலங்கைப் படையினர் ஈடுபட்டு வருவதால்...

வலிகாமம் வடக்கு சபைக்கு நீதிமன்ற நிவாரணம்

தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு முயற்சித்த வலிகாமம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்