பிரெஞ்சு ஓபன் அரை இறுதிக்கு ஆண்ட்ரீவா, மார்ட்டா முன்னேற்றம்

Date:

பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்​றையர் பிரிவு அரை இறு​திச் சுற்றுக்கு உக்​ரைன் வீராங்​கனை மார்ட்டா கோஸ்ட்யுக், ரஷ்ய வீராங்​கனை மிர்ரா ஆண்ட்ரீவா ஆகியோர் முன்​னேறி​யுள்​ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடை​பெற்று வரும் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்​ஸ்​லாம் டென்​னிஸ் போட்​டி​யில் நேற்று நடை​பெற்ற கால் இறுதி ஆட்​டத்​தில் உக்​ரைனின் மார்ட்டா கோஸ்ட்​யுக் 6-3, 2-6, 6-2 என்ற செட் கணக்​கில் சக நாட்​டைச் சேர்ந்த எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி அரை இறு​திக்கு முன்​னேறி​னார்.

மிர்ரா ஆண்ட்​ரீவா (ரஷ்​யா), சோரனா சிர்​ஸ்​டியா (ரு​மேனி​யா) ஆகியோரிடையி​லான மற்​றொரு கால் இறு​திச்​சுற்று ஆட்​டத்​தில் மிர்ரா 6-0, 6-3 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறு​திச் சுற்​றுக்​குத் தகுதி பெற்​றார். நேற்று நடை​பெற்ற 4-வது சுற்று ஆட்டத்​தில் பெலாரஸ் வீராங்​க​னை​யும், உலகத் தரவரிசை​யில் முதல் இடத்​தில் இருப்​பவரு​மான அரினா சபலெங்கா 7-5, 6-3 என்ற கணக்​கில் ஜப்​பானின் நவோமி ஒசா​காவை வீழ்த்தி கால் இறுதிக்குத் தகுதி பெற்​றார்.

spot_imgspot_img

More like this
Related

2 ஈரானிய தூதர்களை வெளியேற்றும் குவைத்

குவைத் எல்லைப் பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து பதற்றம் மேலும்...

முதியோர் இல்லத்தில் தீ: 3 பேர் மாயம்!

ஹொரணை, பட்டகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட...

ஈரானின் தாக்குதலை முறியடித்ததாக கூறுகிறது அமெரிக்கா

வளைகுடாப் பகுதியில் ஈரான் நடத்திய தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்