யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது.
“இது தொடர்பில் சமூகத்தில் எழக்கூடிய தேவையற்ற ஊகங்களைத் தவிர்க்கும் பொருட்டும், உண்மை நிலைமையைப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையிலுமே ஆளுநர் செயலகத்தால் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகின்றது“ என வடக்கு ஆளுனரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எனினும், யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய அலெக்ஸ்ராஜா மீது, வடக்கு ஆளுனர், அரச உயர்மட்டத்திடம் முறையிட்டு, அவரை இடமாற்றம் செய்ய அரசியல் அழுத்தம் கொடுத்ததாக குறிப்பிட்டு, யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின் ஒரு பகுதியினர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.




