மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுவிஸ் கிராமப் பகுதியில் சட்டவிரோத நீண்ட காலமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வீட்டை இன்று சனிக்கிழமை ஒருவரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நேற்று (30) சனிக்கிழமை அதிரடியாக முற்றுகையிட்ட பொலிசார் 27.5 லீற்றர் கசிப்புடன் பிரபல வியாபாரியை கைது செய்தனர்.
விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மட்டு தலைமையக பொலிசார் விசேட புலனாய்வு பிரிவினர் திராய்மடுவில் உள்ள நீண்ட காலமாக கசிப்பு வியாபரத்தில் ஈடுபட்டுவரும் கசிப்பு வியாபரியின் வீட்டை சம்பவ தினமான நேற்று பகல் 11.00 மணியளவில் முற்றுகையிட்டனர்.
இதன்போது கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 29 வயதுடைய பிரபல வியாபாரியை கைது செய்ததுடன் 27.5 லீற்றர் கசிப்பை மீட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சட்டவிரோதமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் கொக்குவில் பொலிசாருக்கு பல முறைப்பாடுகளை தெரிவித்திருந்தும் அவர் தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் மட்டு தலைமையக பொலிசார் குறித்த வியாபரியின் வீட்டை முற்றுகையிட்டு கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
-கனகராஜா சரவணன்-




