இலங்கையில் அடையாளம் காணப்பட்ட புதிய எலி வகை

Date:

மாத்தளை மாவட்டத்தில் உள்ள தும்பர உலக பாரம்பரிய வனக் காப்பகத்தில் அமைந்துள்ள லக்கல, புவக்பிட்டிய பள்ளத்தாக்கில், இலங்கைக்கு மட்டுமே உரித்தான ஒரு புதிய பாலூட்டி (எலி) இனத்தை ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று பதிவு செய்துள்ளது.

இந்த எலி இனத்திற்கு அதன் அறிவியல் பெயரான Mus dumbara எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது ஆங்கிலத்தில் தும்பர பள்ளத்தாக்கு முள் எலி (Dumbara valley spiny mouse) என்றும், சிங்களத்தில் தும்பரா கத்து ஹீன் மெய்யா (Dumbara kathu heen meiya) என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த புதிய இனத்தை அடையாளம் காண்பதில், நிபுணத்துவம் வாய்ந்த விலங்கியல் வல்லுநர்களான சுயாம எச். போயகொட, மாதவ மீகஸ்கும்புர மற்றும் கெலும் மனமேந்திர ஆராச்சி ஆகியோர் பங்களித்துள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்பு குறித்த சமீபத்திய ஆய்வறிக்கை ‘ததானஹி வித்யா’ என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய எலி இனத்தை ‘ஸூக்கீஸ்’ (ZooKeys) என்று வகைப்படுத்துவதற்குக் காரணம், அதன் முதுகில் கடினமான, முட்கள் நிறைந்த முடிகள் இருப்பதே என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பேரினத்தைச் சேர்ந்த பெரும்பாலான கொறித்துண்ணிகள் வறண்ட பகுதிகளில் மட்டுமே காணப்பட்டாலும், ஈரப்பதமான மலைக் காட்டில் இந்த இனம் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு தனித்துவமான நிகழ்வு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

புங்குடுதீவில் கரையொதுங்கிய சடலம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 3ஆம் வட்டாரக் கடற்பகுதியில் சடலம் ஒன்று நேற்று (27)...

போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொலைபேசி உரையாடல்: முஜிபுர் ரஹ்மானிடம் விசாரணை!

போகம்பர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட ஒரு...

மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

மட்டக்களப்பு புதூரில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்னால் உள்ள வீதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்