மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

Date:

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கல்லடி புதிய டச்பார் வீதியை; சேர்ந்த 44 வயதுடைய சந்திரசேகரன் கஜேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வாவியில் சம்பவ தினமான இன்று காலை 6.30 மணியளவில் வழமைபோல மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் சடலம் ஒன்று சிக்கியதையடுத்து அதனை மீனவர் கரைக்கு இழுத்து வந்து பொலிசாருக்கு தெரியப்படுத்தினார்.

குறித்த நபர் மது போதையில் வாவியில் நீராடிய நிலையில் நீரிழ் மூழ்கியுள்ளார் என பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கனகராஜா சரவணன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்