மட்டக்களப்பில் கடும் மழையினால் வெல்லாவெளி மண்டூர் வீதி உடைப்பு

Date:

மட்டக்களப்பில் சீரற்ற காலநிலையால் பெய்துவரும் மழையினால் வெல்லாவெளிக்கும் மண்டூருக்கும் இடையிலான வீதி வெள்ள நீரினால் உடைந்ததையடுத்து அவ்வீதியின் ஊடான போக்குவரத்து செவ்வாய்க்கிழமை (12) முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

மண்டூர் கூமாவடிப் பாலம் தற்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. இந்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வாகனப் போக்குவரத்திற்காகப் பாலத்திற்கு அருகாமையில் தற்காலிக வீதி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, வெள்ள நீர் பெருக்கு வீதியை மூடிப் பாய்ந்ததுடன், தற்காலிகமாகப் அமைக்கப்பட்டிருந்த பாதையை உடைந்து முற்றாக சேதமடைந்துள்ளது

இந்த வீதி உடைந்ததன் காரணமாக மண்டூர், வெல்லாவெளி மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதையடுத்து அத்தியாவசியத் தேவைகள், மருத்துவத் தேவைகளுக்காக நகரப் பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் முடங்கியுள்ளனர்.

அதேவேளை வெல்லாவெளி மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும் அரச உத்தியோகஸ்தர்கள் கடமைக்குச் செல்ல முடியாமல் வீதியோரத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் விவசாய நிலங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

-க.சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் யோசனையை அரசு பரிசீலனை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான...

முதியோர் கொடுப்பனவை மீள வழங்க சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை...

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,400-ஐ கடந்தது; மீட்புப் பணிகள் தீவிரம்

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சனிக்கிழமை 1,400-ஐ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்