முள்ளிவாய்க்கால் அவலம்: 17 வருடங்களின் பின் மே மாதத்தில் மஹிந்த குடும்பம் கண்ணீர் விடுகிறது!

Date:

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் போது தமிழ் மக்கள் விட்ட கண்ணீர் இன்று மகிந்த ராஜபக்ச குடும்பம் 17 வருடங்களுக்கு பின்னர் அதே மாதத்தில் கண்ணீர் விடுகிறது. அவ்வாறே தமிழ் மக்கள் மீது இன அழிப்பை செய்தவர்களை கண்டுபிடித்து சர்வதேச நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17-ம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, ‘தமிழின அழிப்பு நாள்’ நேற்று செவ்வாய்க்கிழமை (12) மாலையில் கொட்டும் மழைக்கு மத்தியில் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு தூபிக்கு முன்னால் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தி கஞ்சி வார்த்தை கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு ருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த தமிழ் மக்கள் மீது இன அழிப்பு நடைபெற்ற மே மாதமாகும் இந்த மாதத்தில் மருத்துவம் உணவு இன்றி குழந்தைகள் தொடக்கம் முதியோர் வரை பட்டினியை எதிர் நோக்கியதுடன் மிக மோசமாக படுகொலை செய்யப்பட்ட காலம். இந்த இனஅழிப்பு இடம்பெற்று 17 வருடங்களுக்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்

இது தமிழர்களை பொறுத்தமட்டில் இந்த மாதம் கண்ணீர் சுமந்த மாதம் தமிழர்களுக்கு அநீதி விளைவித்ததில் மஹிந்த ராஜபக்ஷவும் ஒருவர் அதேபோன்று தமிழர்களின் இன அழிப்பில் பங்கு கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு தமிழர்களுக்கான தீர்வுகள் கிடைக்கும் வரைக்கும் நீதி விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்

தமிழர்களை அவர் செய்தார் இவர் செய்தார் என குற்றம் சாட்டி தமிழ் மக்கள் மீது மிக மோசமாக வெர்கள் செய்த அநியாயங்கள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும்

தமிழ் மக்களை கொல்வதற்காக வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள், விமானங்களை கொள்வனவு செய்வதற்காக பொய்யான கணக்குகள் காட்டப்பட்டு பெரும் அளவிலான பணங்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக இந்த ஊழல் மோசடிகளை பலர் சந்திக்கும் நிலைப்பாடு காணப்படுகின்றது

ஆகவே இந்த மாதத்தில் தமிழர்கள் மீது மிக மோசமான இன அழிப்பை செய்தவர்களை கைது செய்வதையிட்டு தமிழர்கள் நிம்மதி அடைகின்றனர். அதேவேளை இந்த இனத்தின் மீது அநியாயம் செய்தவர்களை கைது செய்து தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க இந்த நாட்டின் தலைவர் முன்வர வேண்டும் என்றார்.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் முதல் Orthodox Bishop பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது

இலங்கை கிறிஸ்தவ வரலாற்றில் புதிய அத்தியாயமாக, ஆர்த்தடாக்ஸ் பாரம்பரிய கிறிஸ்தவ திருச்சபையின்...

சுரேஷ் சலே விவகாரத்தில் சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் – முன்னாள் எம்.பிக்கள் வலியுறுத்தல்

சுரேஷ் சலே விவகாரம்: சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் எம்.பிக்கள்...

என்னை நோக்கிய குற்றச்சாட்டுகள் தவறான கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன – நாமல்

இன்றைய அரசாங்கத்தின் கீழ் பொதுமக்களின் பணம் மட்டுமன்றி, தோல்விகளுக்கான பொறுப்புகளும் குற்றச்சாட்டுகளும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்