மட்டக்களப்பில் திடீரென பற்றியெரிந்த வாகனம்

Date:

​மட்டக்களப்பு, ஆரையம்பதி – ஒல்லிக்குளம் பகுதியில் நேற்று (10) மாலை வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் முற்றாகச் சேதமடைந்தது.

​மருதமுனையில் இருந்து கொக்கட்டிச்சோலைக்கு வந்த இந்த வாகனம், அங்கிருந்து திருமண வைபவம் ஒன்றிற்காக வெளிநாடு செல்லவிருந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கி புறப்பட்ட போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

வாகனத்தில் பயணம் செய்த ஐந்து பயணிகளும் தீ பரவியதை கண்டவுடன் உடனடியாக வாகனத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேறி விட்டனர்.

​சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு தீயணைப்புப் படையினர், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், வாகனம் முழுமையாக எரிந்தது.

​மட்டக்களப்பு தலைமையக தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்தில் சோதனைகளை நடத்தினர்.

இயந்திரக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது..​மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் ஜோசப் விஜய்

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது...

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்

தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர்...

வடக்கில் சுமந்திரன்… கிழக்கில் சாணக்கியன்; சிங்கள ஆக்கிரமிப்பிற்கு துணை போகிறார்களா?: கஜேந்திரகுமார் எம்.பி கேள்வி!

மட்டக்களப்பில் எல்லை கிராமங்கள் சிங்கள மயப்படுத்துகின்ற வேலை திட்டத்துக்கு இங்கு இருக்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்