நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு

Date:

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்றார். இந்தச் சூழலில், அவர் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திக்க சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் இல்லத்துக்கு வந்த ஜோசப் விஜய்யை, சீமான் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்றார். சீமானுக்கு ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து சீமானும் முதல்வர் ஜோசப் விஜய்க்கு புத்தகம் கொடுத்து மரியாதை செய்தார்.

சீமானுடன் சிறிது நேரம் உரையாடிய பின்னர் அங்கிருந்து முதல்வர் ஜோசப் விஜய் புறப்பட்டார். முதல்வர் ஜோசப் விஜய்யை வாசல் வரை வந்து சீமான் வழியனுப்பி வைத்தார்

முன்னதாக, இன்று முதல்வர் ஜோசப் விஜய் தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும், பாமக தலைவர் அன்புமணியையும் அவர்களின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் முதல் Orthodox Bishop பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது

இலங்கை கிறிஸ்தவ வரலாற்றில் புதிய அத்தியாயமாக, ஆர்த்தடாக்ஸ் பாரம்பரிய கிறிஸ்தவ திருச்சபையின்...

சுரேஷ் சலே விவகாரத்தில் சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் – முன்னாள் எம்.பிக்கள் வலியுறுத்தல்

சுரேஷ் சலே விவகாரம்: சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் எம்.பிக்கள்...

என்னை நோக்கிய குற்றச்சாட்டுகள் தவறான கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன – நாமல்

இன்றைய அரசாங்கத்தின் கீழ் பொதுமக்களின் பணம் மட்டுமன்றி, தோல்விகளுக்கான பொறுப்புகளும் குற்றச்சாட்டுகளும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்