கோப்பாய் விபத்தில் இரு இளைஞர்கள் பலி

Date:

யாழ்ப்பாணம் கோப்பாயில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு அண்மையாக நேற்று நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரு இளைஞர்கள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மதிலுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்தவேளை குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. இதன்போது கரவெட்டி வடக்கைச் சேர்ந்த சிவதாசன் துசிந்தன் (22), ஏழுமலை துசாந்தன் (24) ஆகிய இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

இருவரதும் சடலமும் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய் ஆட்சி அமைக்க விசிக ஆதரவு: தவெக பலம் 120 ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இடதுசாரிகள் ஆதரவளித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தனது...

15 வயது சிறுமி பாலியல் அடிமையாக்கப்பட்ட குற்றச்சாட்டு: பௌத்த பிக்குவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

அனுராதபுர நீதவான் நீதிமன்றம், கூறப்படும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக,...

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்