பேருந்தில் 14 வயது சிறுமியுடன் சேட்டைவிட்ட இராணுவச்சிப்பாய் கைது!

Date:

பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பிரயாணிகளுடன் பயணித்த பஸ் வண்டியில் 14 வயது சிறுமி ஒருவருடன் பாலியல் சேட்டை புரிந்த புனானை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் இராணுவ சிப்பாய் ஒருவரை வியாழக்கிழமை (23) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த 20 ம் திகதி பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பிராணித்த தனியார் பஸ் வண்டியில் 14 வயது சிறுமி அவரது சிறிய தந்தையுடன் வாழைச்சேனையில் உள்ள அவரது வீட்டிற்கு செல்வதற்காக பிரயாணித்துள்ளார்

அதேவேளை புனாணை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் இராணுவ சிப்பாய், விடுமுறையிலிருந்து கடமைக்கு திரும்பும்போது பஸ் வண்டியில் ஏறி சிறுமிக்கு அருகில் அமர்ந்துள்ளார். பஸ்வண்டி மன்னம்பிட்டியை தாண்டி சென்று கொண்டிருந்தபோது குறித்த இராணுவ சிப்பாய் சிறுமி மீது பாலியல் சேட்டை செய்ய முற்பட்டதையடுத்து சிறுமி அருகில் இருந்த சிறிய தந்தையிடம் முறையிட்டுள்ளார். அவர் அந்த இராணுவ சிப்பாய் மீது தாக்குதல் நடாத்தினார்.

இதனையடுத்து பஸ்வண்டியை சாரதி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்று நிறுத்தி பஸ்வண்டியில் நடந்த சம்பவத்தை தெரிவித்ததையடுத்து பொலிசார் தாக்குதலுக்கு உள்ளான இராணுவ சிப்பாயை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் தாக்குதலை மேற்கொண்ட சிறுமியின் சிறிய தந்தையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இது தொடர்பாக விசாரணை மேற் கொண்டுவந்த பொலிசார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய் நோய் குணமாகி வாட்டில் இருந்து வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு வெளியேற முற்பட்டபோது அவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நேற்று வெள்ளிக்கிழமை (24) நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

-கனகராஜா சரவணன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

நீர் வழங்குமாறு விவசாயி கோரிக்கை

முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் குளத்திற்கு கீழ் சிறுபோக...

மீனவரை சித்திரவதை செய்த கடற்படை மீது சித்திரவதை தடுப்பு சட்டத்தில் வழக்கு தொடர நீதிமன்றம் உத்தரவு!

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவரை முழங்காலில் வைத்து தாக்கிய...

ரூ.15,000 இலஞ்சம் வாங்கியவருக்கு 6 வருட சிறை!

இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக ஒரு தொழிலாளர் அதிகாரிக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்