உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக மீனாட்சியம்மன் கோயில் வழக்கில் தமிழில் உத்தரவு

Date:

மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயில் குட​முழுக்கு வழக்​கில் உயர் நீதி​மன்​றம் முதல் முறையாக தமிழில் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. இது உயர் நீதி​மன்​றத்​தின் முதலா​வது தமிழ் உத்​தர​வாகும்.

கரூர் வழக்​கறிஞர் தமிழ் ராஜேந்​திரன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்​தில் கோயில் குட​முழுக்​கு​களில் சம்​ஸ்​கிருத மந்​திரங்​களுக்கு இணை​யாக தமிழ் மந்​திரங்​களும் ஓத வேண்​டும் என நிபுணர் குழு அறிக்கை அளித்​துள்​ளது. இந்த அறிக்​கை​யைப் பின்​பற்ற வேண்​டும் என உயர் நீதி​மன்​றம் பல்​வேறு வழக்​கு​களில் உத்​தர​விட்​டுள்​ளது.

அதன்​படி மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயி​லில் செப்​.17-ல் நடை​பெறும் குட​முழுக்கு உட்பட அனைத்​துக் கோயில்​களில் நடை​பெற​விருக்​கும் குட​முழுக்​கு​களில் யாக​சாலை, கரு​வறை மற்​றும் கோபுர விமானங்​களில் சம்​ஸ்​கிருத மந்​திரங்​களு​டன் தமிழ் மந்​திரங்​களும் ஓத வேண்​டும் என உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கோரப்​பட்​டிருந்​தது.

இந்த மனு​வில் நீதிபதி பரத சக்​கர​வர்த்தி நேற்று பிறப்​பித்த உத்​தர​வு: வரும் செப்​டம்​பர் மாதம் நடை​பெறும் மீனாட்​சி​யம்​மன் கோயில் குட​முழுக்கு விழா​வில் சம்​ஸ்​கிருத மந்​திரங்​களு​டன் தமிழ் மந்​திரங்​களும் ஓதப்பட வேண்​டும் என மனு​தா​ரர் தரப்​பில் வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது.

இந்த கோரிக்கை தொடர்​பாக ஏற்​கெனவே ஒரு குழு அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், பல வழக்​கு​களில் உயர் நீதி​மன்​ற​மும் உத்​தரவு பிறப்​பித்​திருப்​ப​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அரசுத் தரப்​பில், மீனாட்​சி​யம்​மன் கோயில் குட​முழுக்கு தேதி இன்​னும் இறுதி செய்​யப்​பட​வில்​லை. தமிழ் மந்​திரங்​கள் ஓது​வது குறித்து எடுக்​கப்​பட்ட நடவடிக்​கைகள் தாக்​கல் செய்​யப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மீனாட்​சி​யம்​மன் கோயி​லில் அமைந்​திருக்​கும் பொற்​றாமரைக் குளம், பண்​டைய நாட்​களில் சங்​கப் பலகை​யாகத் திகழ்ந்​துள்​ளது. இப்​பல​கை​யில் தமிழ் இலக்​கி​யங்​களும், காவி​யங்​களும் அரங்​கேற்​றப்​பட்​ட​தாக நம்​பப்​படு​கிறது.

இந்த வழக்​கின் முக்​கி​யத்​து​வம் கருதி அறநிலை​யத் துறை இணை ஆணை​யர், மீனாட்​சி​யம்​மன் கோயில் இணை ஆணை​யர் – செயல் அலு​வலர் ஆகியோரை நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து எதிர்​மனு​தா​ரர்​களாக சேர்க்​கிறது.

இரு​வரும் மீனாட்​சி​யம்​மன் கோயில் குட​முழுக்​கில் தமிழில் மந்​திரங்​களை ஓது​வது தொடர்​பாக எடுக்​கப்​பட்டு வரும் நடவடிக்கை குறித்து ஜூன் 2-ல் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். இவ்​வாறு நீதிபதி உத்​தர​வில் குறிப்​பிட்​டுள்​ளார்.

உயர் நீதி​மன்​றங்​களில் வழக்​கு​கள் ஆங்​கிலத்​தில் தாக்​கல் செய்​யப்​படும். விசா​ரணை​யின்​போது பெரும்​பாலான வழக்​கறிஞர்​கள் ஆங்​கிலத்​தில் வாதிடு​வார்​கள். சிலர் தமிழில் வாதிடு​வர்.

இருப்​பினும் வழக்​கின் உத்​தர​வானது ஆங்​கிலத்​தில் தான் வெளி​யாகும். இந்த வழக்​கத்​துக்கு மாறாக மீனாட்​சி​யம்​மன் கோயில் வழக்​கின் உத்​தரவு ஆங்​கிலம் மற்​றும் தமிழில் இரணடிலும் வெளி​யாகி​யுள்​ளது. இது உயர் நீதி​மன்​றத்​தின் முதலா​வது தமிழ் உத்​தரவு ஆகும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மும்பையில் அல்லு அர்ஜுன் வசிக்கும் பங்களாவுக்கு ரூ.16 லட்சம் வாடகை

‘புஷ்பா’ படம் மூலம் பான் இந்தியா நடிகராகிவிட்ட அல்லு அர்ஜுன், அடுத்து...

விமானிகள் கைபேசியில் புகைப்படம் எடுத்ததே விமான விபத்திற்கு காரணம்

சியோலின் தணிக்கை மற்றும் ஆய்வுக் குழுவின் அறிக்கையின்படி, 2021-ல் இரண்டு தென்...

பிரீமியம் இலக்கத்தகட்டை விரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

அதிக மதிப்புள்ள வாகனப் பதிவு எண்களைத் தேர்ந்தெடுக்கும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்