தனுஷ் இயக்​கத்​தில் மிருணாள் தாக்​குர்!

Date:

தனுஷ் நடித்​துள்ள ‘கர’ படம் ஏப்​.30ம் திகதி வெளி​யாக இருக்​கிறது. விக்​னேஷ் ராஜா இயக்​கி​யுள்ள இப்​படத்​தில் மமிதா பைஜு, சுராஜ் வெஞ்​சரமூடு, கே.எஸ்​.ரவி​கு​மார் உள்பட பலர் நடித்​துள்​ளனர்.

ராம​நாத​புரம் பின்​னணி​யில் உரு​வாகி​யுள்ள இப்​படத்தை அடுத்து ராஜ்கு​மார் பெரிய​சாமி இயக்​கும் படத்​தில் நடிக்​கிறார் தனுஷ். இதில் ஸ்ரீலீலா, சாய் பல்​லவி நாயகி​களாக நடிக்​கின்​றனர். இது தொடர்​பான அறி​விப்பு வெளி​யாகி இருந்​தது. பின்​னர், தமிழரசன் பச்​ச​முத்து இயக்​கும் படத்​தி​லும் அவர் நடிக்க இருக்​கிறார்.

இதற்​கிடையே ‘இட்லி கடை’ படத்​துக்​குப் பிறகு மீண்​டும் படம் இயக்கி நடிக்க இருக்​கிறார் தனுஷ். 1960-ல் நடப்​பது போன்ற கதையைக் கொண்ட இது நாயகியை மையப்​படுத்​தி​யது என்​றும் அதில் மிருணாள் தாக்​குர் நடிக்க இருப்​ப​தாக​வும் கூறப்​படு​கிறது.

இவர்கள் இரு​வரும் காதலித்து வரு​வ​தாக​வும் திரு​மணம் செய்​து​கொள்ள இருப்​ப​தாக​வும் செய்​தி​கள் வெளி​யானது. அதை மிருணாள் தாக்​குர் மறுத்​திருந்​தார். இந்​நிலை​யில் இரு​வரும் புதிய படத்​தில் இணைவ​தாக வெளி​யான தகவல்​ இணை​யத்​தில்​ பரபரப்​​பாகப்​ பேசப்​பட்​டு வரு​கிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்