ஹட்டனில் 50 தோட்ட வீடுகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு

Date:

ஹட்டன் – டிக்கோயா பகுதியில் இன்று (21) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக, டிக்கோயா போடைஸ் தோட்டத்தின் தாழ்நிலப்பகுதிகளில் அமைந்துள்ள 50 தோட்ட வீடுகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக, ஹட்டன் போடைஸ் ஊடாக டயகம செல்லும் பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தோட்டப்பகுதி ஊடாக காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் பாயும் டிக்கோயா ஓடை வான்பாய்ந்ததன் காரணமாகவே, இவ்வாறு தோட்ட வீடுகளும் பிரதான வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

“இரண்டு ஆண்டு வலி…” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த டாக்ஸிக் உறவு அனுபவம்

“என் வாழ்வில் இரண்டு ஆண்டுகள் நார்சிஸ்டிக் (Narcissistic) கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருந்தேன்” என...

இரண்டாவது தேனிலவுக்காக தொழிலதிபரின் ஏரிஎம் அட்டை திருடிய யுவதி கைது!

தனது தேனிலவுக்கு செலவிடுவதற்காக ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமான ஏடிஎம் அட்டைகளைத் திருடியதாகக்...

மையவாடி பிரச்சினைக்கு மாளிகைக்காடு பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் சம்மேளனத்துடன் பிரதேச சபை கலந்துரையாட வேண்டும் – உப தவிசாளர் இஸ்மாயில்

மாளிகைக்காடு மக்களுக்கான நிரந்தரமான மாற்று மையவாடியை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை காரைதீவு பிரதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்