மஹரகம வீட்டில் தீவிபத்து: 3 பேரின் மரணத்தின் காரணம் வெளியானது!

Date:

மகரகம, பமுனுவ வீதியில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் நேற்று முன்தினம் (18) மாலை ஏற்பட்ட தீ விபத்து, வீட்டின் வாடகை தொடர்பான முரண்பாடு காரணமாக வீட்டின் உரிமையாளராலேயே ஏற்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீண்டகாலமாக வீட்டின் உரிமையாளருக்கும், வாடகைக்கு இருந்தவர்களுக்கும் இடையில் முரண்பாடு நிலவி வந்தமை தொடர்பாக மகரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மகரகம – பமுனுவ வீதியில் உள்ள வீடொன்றின் மேல் தளத்திலேயே நேற்று முன்தினம் மாலை இந்தத் தீ பரவியது.

பின்னர் அதனைக் கண்ட பிரதேச மக்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போது வீட்டிற்குள் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகி இருந்த இரண்டு ஆண்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் வீட்டின் உரிமையாளரும், வாடகைக்கு தங்கியிருந்த குடும்பத்தின் தலைவருமே இவ்வாறு தீக்காயங்களுக்கு உள்ளாகினர்.

எனினும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் வீட்டின் அறையொன்றிற்குள் குறித்த குடும்பத் தலைவரின் 55 வயது மனைவியும் 16 வயது மகளும் உயிரிழந்த நிலையில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

அதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 76 வயதான வீட்டின் உரிமையாளரும் நேற்று (19) காலை உயிரிழந்துள்ளதாக மகரகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மகரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும்

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) இஸ்லாமாபாத்திற்கு ஒரு...

பெண்ணின் தலைமுடியை வெட்டியவர்களுக்கு விளக்கமறியல்

இணையத்தில் பரப்பப்பட்ட ஒரு காணொளிக் காட்சியின்படி, பொருட்கள் திருட்டு தொடர்பாக பல்பொருள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்