யாழ், கொழும்பிலிருந்து மட்டு, அம்பாறைக்கு பேருந்தில் தனியாக செல்பவர்களுக்கு எச்சரிக்கை!

Date:

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு அம்பாறைக்கு தனியாக பஸ்வண்டிகளில் பிரயாணிக்கும் பிரயாணிகளுக்கு மயக்கமருந்து கலந்து லெமன்பெப் பிஸ்கட் வழங்கி கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றது எனவே தனியாக பிரயாணிப்பவர்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் பிஸ்கட வாங்கி சாப்பிட வேண்டாம் என்பதுடன் பொதுமக்கள் கொள்ளையர்களிடம் அவதானமாக இருக்குமாறு கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு பிரயாணிக்கும் பஸ் வண்டிகளில் பிரயாணிகள் போல பிரயாணிக்கும் கொள்ளையர்கள் வஸவண்டியில் தனியாக யார் பிரயாணிக்கின்றனர் என நோட்டமிட்டு பின்னர் அவர்களுக்கு அருகில் சென்று பேச்சு கொடுத்துவிட்டு அவர்களுக்கு தமது பையில் இருந்து கவர் உடையாத மயக்க மருந்து கலந்த லெமன் பெப் பிஸ்கட்டை எடுத்து கொடுத்து வழங்குவார்கள் அதனை உடைத்து சாப்பிட்டதும் சிறிது நேரத்தில் அவர்கள் மயக்கமடைந்து விடுவார்கள்.

அதன் பின்னர் அவர்கள் அணிந்திருக்கும் காப்பு மோதிரம், சங்கிலி, போன்ற தங்க ஆபரணங்கள் மற்றும் அவர்களுது கைபையில் இருக்கும் பணம் என்பவற்றை கொள்ளையடித்து கொண்டு ஏதாவது ஒரு இடத்தில் இறங்கி விடுவார்கள் மயக்கமடைந்தவர் பின்னர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு 3 தினங்களுக்கு பின்னர்தான் சுயநிலைக்கு வருகின்றனர்.

இவ்வாறு அண்மை காலமாக பஸ்வண்டியில் பிரயாணித்த பலரிடம் கொள்ளைகள் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு கிடைத்துள்ளது எனவே குறித்த மாவட்டங்களில் இருந்து தனியாக பிரயாணம் செய்வர்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் எதையும் வாங்கி சாப்பிடகூடாது என்பதுடன் பொதுமக்கள் விழிப்பாகவும் அவதானமாகவும் செய்படவும் என அவர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய் ஆட்சி அமைக்க விசிக ஆதரவு: தவெக பலம் 120 ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இடதுசாரிகள் ஆதரவளித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தனது...

15 வயது சிறுமி பாலியல் அடிமையாக்கப்பட்ட குற்றச்சாட்டு: பௌத்த பிக்குவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

அனுராதபுர நீதவான் நீதிமன்றம், கூறப்படும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக,...

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்