மின்னல் தாக்கி யுவதி பலி

Date:

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல் தாக்கியதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் (7) மாலையில் இந்த சம்பவம் நடந்தது.

தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் இந்த யுவதி, மாலையில் வீடு திரும்பிய போது, மழை பெய்ததால், வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த தனது தாய் மற்றும் தந்தைக்கு, குடையை கொண்டு சென்றுள்ளார்.

அவர்களிடம் குழையை வழங்கி, பெற்றோருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, யுவதி மின்னல் தாக்குதலுக்கு உள்ளானர்.

பெற்றோருக்கு மத்தியில் நடந்து வரும் போதே அவர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளானர். தாயாரும் சிறியளவில் பாதிக்கப்பட்டுள்ளார்.

மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் கென் ஹத பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சமோதி மல்ஷானி என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல்...

மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்பினர் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல்

மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்