செங்கலடி நகருக்குள் நுழைந்த காட்டு யானை

Date:

மட்டக்களப்பு செங்கலடி கறுத்தப்பாலம் ஊடாக நகருக்குள் உள்நுழைந்து காட்டு யானை ஒன்று விவசாய பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை உடைத்து அங்கிருந்த அரிசி மூடைகளை தேசப்படுத்தியதுடன் அந்த பகுதியில் மதில்களையும் தென்னை மரங்கள் வாழைமரங்களை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.

செங்கலடி கறுத்தப்பாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக நிலை கொண்டுள்ள காட்டு யானை சம்பவம் தினமான இன்று அதிகாலையில் செங்கலடி பதுளை வீதியல் உள்நுழைந்து கடையை உடைத்து அரிசி மூடைகளை சேதப்படுத்தியதுடன் பலன் தரும் மரங்களை உடைத்து தேசப்படுத்தியதையடுத்து அப்பகுதியில் இருந்து யானையை விரட்டிய அடைக்கப்பட்டுள்ளது

மாவட்டத்தில் யானைகள் தொடர்ந்து நகருக்கு உள்நுழையும் நடவடிக்கைகள் அண்மை காலங்களாக அதிகரித்து வருவதுடன் யானை தாக்குதல் வவுணதீவு, ஆயித்தியமலை, கரடியனாறு, கொக்கட்டிச்சோலை வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுகளின் கீழ் வாழ்ந்து வரும் பலர் உயிரிழந்துள்ளதுடன் கிராம மக்கள் தினம் தினம் பயப் பீதியில் இரவு பொழுதை கழிக்க வேண்டிய நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

-கனகராசா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...

மஹிந்த கூட்டத்தை புகழ்ந்து பாடிய பைத்தியத்தை தெளிய வைப்போம்

யாழ்ப்பாணத்தில்; இருந்து சென்ற ஒரு பைத்தியம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்