புதையல் தோண்டிய 2 பெண்கள் உள்ளிட்ட 11 பேர் கைது!

Date:

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 11 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலையில் கைது செய்துள்ளதுடன் ஸ்கானர் இயந்திரம் மற்றும் வான் ஓன்றையும் மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான இன்று அதிகாலை 5.00 மணிக்கு திக்கோடை ஆனந்தப் பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றை பொலிசார் முற்றுகையிட்டனர்.

இதன்போது புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புத்தளம், அட்டாளைச்சேனை, கல்கமுவ, பெரிய போரதீவு, பெரியநீலாவணை, பொல்காவலை, திக்கோடை பிரதேசங்களைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட 11 பேரை கைது செய்ததுடன் இவர்களிடம் இருந்து ஸ்கானர் இயந்திரம் மற்றும் வான் ஒன்றையும் மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

-கனகராசா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் அன்வர் எம். முஸ்தபா சந்திப்பு: கிழக்கின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டாக்டர் நய்யார் நசீர்...

காரைதீவு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம்

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “உள்ளூராட்சி வாரம்...

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்