வடக்கு புகையிரத சேவை ஏப்ரல் 9 மீள ஆரம்பம்!

Date:

வடக்குக்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்துள்ளார்.

மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரதப் பாதையில் ஐந்து புகையிரதப் பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக, வடக்குக்கான புகையிரத சேவைகள் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, எதிர்வரும் 9ஆம் திகதி முதல் புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான ஆசன முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், பயணிகள் தமக்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளமையால், புகையிரதக் கடவைகளைக் கடப்பவர்கள் மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்புடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் யோசனையை அரசு பரிசீலனை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான...

முதியோர் கொடுப்பனவை மீள வழங்க சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை...

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,400-ஐ கடந்தது; மீட்புப் பணிகள் தீவிரம்

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சனிக்கிழமை 1,400-ஐ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்