புதையல் தோண்டிய பிரதேச செயலக கணக்காளர் உள்ளிட்ட 9 பேர் கைது!

Date:

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மண்முணை பிரதான வீதியில் ஆலையம் ஒன்றிற்கு அருகாமையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ,டுபட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மொரட்டுவ பிரதேச செயலக பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட 9 பேரையும் எதிர்வரும் 10 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

மட்டு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடந்த மார்ச் 31 ம் திகதி இரவு மண்முணை பிரதான வீதியிலுள்ள ஆலையம் ஒன்றிற்கு அருகாமையில் உள்ள காணி ஒன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த மொரட்டுவ, கட்டுகஸ்தோட்டை, இங்கிராக்கொட, பொன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 9 பேரை கைது செய்ததுடன் பூஜை பொருட்களை மீட்டு காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் கடந்த முதலாம் திகதி ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

  • கனகராசா சரவணன்-
spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் முதல் Orthodox Bishop பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது

இலங்கை கிறிஸ்தவ வரலாற்றில் புதிய அத்தியாயமாக, ஆர்த்தடாக்ஸ் பாரம்பரிய கிறிஸ்தவ திருச்சபையின்...

சுரேஷ் சலே விவகாரத்தில் சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் – முன்னாள் எம்.பிக்கள் வலியுறுத்தல்

சுரேஷ் சலே விவகாரம்: சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் எம்.பிக்கள்...

என்னை நோக்கிய குற்றச்சாட்டுகள் தவறான கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன – நாமல்

இன்றைய அரசாங்கத்தின் கீழ் பொதுமக்களின் பணம் மட்டுமன்றி, தோல்விகளுக்கான பொறுப்புகளும் குற்றச்சாட்டுகளும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்