கந்தளாயில் நீரில் மூழ்கி மாணவன் பலி

Date:

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதுவெலிய பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பேராதுவெலிய பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் என தெரியவந்துள்ளது.

இவர் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்த மாணவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுவன் தனது நண்பர்கள் மூவருடன் இணைந்து அந்த இடத்தில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

விபத்தையடுத்து பிரதேசவாசிகளும் இளைஞர்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், அவர் நீராடச் சென்ற இடத்திலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் சடலமாக மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கௌரவத்திற்காக எழுந்து நின்ற பல்கலைக்கழக வேந்தர்! ருஹுண பல்கலைக்கழகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மாணவி!

பொதுவாக, பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களில் வேந்தர் தனது இருக்கையில் அமர்ந்தவாறே மாணவர்களுக்குப்...

பன்னிப்பிட்டியாவில் பழைய இரும்பு விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து!

கொழும்பு, பன்னிப்பிட்டிய – தெபானம பகுதியில் அமைந்துள்ள பழைய இரும்புப் பொருட்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்