தர்மபுரம் விபத்தில் 2 இளைஞர்கள் பலி

Date:

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் – முல்லைத்தீவு (A35) வீதியில், தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நடந்த விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (03) இரவு, அந்த வீதியில் பயணித்த கனரக வாகனமொன்றுடன், பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்