அர்ச்சுனாவின் உளறு வாய்க்கு பெரும் ஆப்பு: நிகழ்நிலை காப்பு சட்டத்தில் வழக்கு!

Date:

தெல்லிப்பளை வைத்தியசாலை புற்றுநோய் பிரிவு வைத்தியர் ஒருவருக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வைத்தியர் ஜெயக்குமார் உள்ளிட்ட தரப்புகளுக்கு எதிராக யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிகழ்நிலை காப்பு சட்டத்தின் (Online Safety Act) கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, இன்றைய தினம் (02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான வைத்தியர் ஜெயக்குமார் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

எனினும், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்றைய விசாரணையில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினம் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட பிரதிவாதிகளை கட்டாயம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரானின் எஃகு ஆலைகள் இரண்டு செயலிழந்தன

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களின் தொடர்ச்சியான அலைகளால் ஈரானின் இரண்டு மிகப்பெரிய...

சட்டத்தரணியின் அடிப்படை உரிமைகளை மீறியதால் ரூ.60,000 இழப்பீடு வழங்க பொலிஸ் பேச்சாளருக்கு நீதிமன்றம் உத்தரவு!

2017 ஆம் ஆண்டு நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்தின்...

பாடசாலைகளில் உடல்ரீதியான தண்டனைக்கு தடை: கல்வி அமைச்சு உத்தரவு!

மாணவர்களுக்கு உடல்ரீதியான தண்டனை அளிப்பதும், எந்த விதமான உடல் அல்லது மனரீதியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்