சர்வாதிகார போக்குடன் நடக்கும் மாகாண கல்வித்திணைக்களம்

Date:

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கோரிக்கையினை மாகாண கல்வித்திணைக்களம் பரிசீலனை செய்யாது மீண்டும் மீண்டும் ஒரே ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபசெயலாளர் தீபன் திலீசன் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற ஆசிரியர்களுடான கலந்துரையாடல் பின் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

பல்வேறு நோய்க்காரணங்களாலும் ஏற்கனவே கஷ்டப்பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்களையும் மீண்டும் மொழிமாற்றங்களுக்கு அனுப்புவதற்கு வடமாகாண கல்வி திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் ஆசிரியர் தங்களுடைய இடமாற்ற கோரிக்கை தொடர்பான மேல்முறையீட்டினை கல்வி திணைக்களத்திற்கு அனுப்பி இருக்கின்ற போதிலும் அவை எதனையும் பரிசீலனை செய்யாது தாம் சொல்லுவதை மாத்திரமே நீங்கள் செய்ய வேண்டும் என்ற சர்வாதிகாரப் போக்குடன் மாகாண கல்வி திணைக்களம் நடந்து கொள்வதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபசெயலாளர் தீபன் திலீசன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கா விட்டால் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு முன்னார் தீர்வு கிடைக்கும் வரை நாளையில் இருந்து தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்த ஒரே ஜனாதிபதி அனுரவாம்!

மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களாராமயவின் விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிழக்கு மாகாண...

வாகன, தங்க கடன்களுக்கான புதிய கடன் கட்டுப்பாடுகள்: இன்று முதல் நடைமுறை!

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்