மட்டக்களப்பில் 13 பிடியாணைகளுடன் 3 வருடங்களாக தலைமறைவாக இருந்தவர் கைது!

Date:

மட்டக்களப்பில் 13 நீதிமன்ற திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 3 வருடங்களாக தலைமறைவாகி வந்த நிலையில் திருகோணமலை சேருநுவர பகுதியில் வைத்து மட்டு தலைமையக பொலிசாரால் கைது செய்யப்பட்ட முகத்துவாரம் நாவலடி பகுதியைச் சோந்த 37 வயதுடைய ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (20) உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு முகத்துவாரம் நாவலடியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் வெளிநாடு அனுப்புவதாக பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட நிலையில் அவருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்த நிலையில் அவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.

அதன் பின்னர் குறித்த நபர் நீதிமன்றங்களில் ஆஜராகாமல் 3 வருடங்களாக தலைமறைவாகி வந்துள்ள நிலையில் அவருக்கு எதிராக 9 திறந்த நீதிமன்ற பிடியாணையும் 4 பிடியாணையுமாக 13 பிடியாணை பிறப்பிக்கப்பட்டது .

இதனை தொடர்ந்து மட்டு தலைமையக பொலிஸ் நிலைய நீதிமன்ற பிடிவிறாந்து தொடர்பான பொறுப்பதிகாரியான பொலிஸ் சாஜன் கோகுலன் கிடைத்த தகவலுக்கு அமைய அவர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் திருகோணமலை சேருநுவர பகுதியில் தலைமறைவாகியிருந்த குறித்த நபரின் வீட்டை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு அவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்தவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தியபோது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அதேவேளை அவருக்கு எதிராக 26 வழக்குகள் உள்ளதாகவும் ஏறாவூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளுக்கு அவருக்கு பிணைக்கு கையெழுத்திட்டவர்கள் தற்போது அதில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-கனகராசா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

மோசடி மன்​னன் சுகேஷ் சந்​திரசேகர் மற்​றும் அவரது கூட்​டாளி​கள் பண மோசடி​யில்...

சென்னையில் கார் ஏற்றி கொல்லப்பட்ட 18 வயதான இலங்கைப் பெண்!

சென்னை கோயம்பேட்டில் மதுபான பாரில் நடனம் ஆடும்போது ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக...

பிரான்ஸில் கத்திக்குத்து நடத்த முயன்ற இலங்கையரை சுட்டுக்கொன்ற பொலிஸ்

மே 30, சனிக்கிழமையன்று, பிரான்ஸின், பாரிஸ் நகர், போபிக்னியில் இரண்டு கத்திகளுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்