மட்டக்களப்பில் பாழடைந்த கிணற்றிலிருந்து உயிருக்கு போராடிய பெண்: அழுகிய நிலையில் யுவதியின் சடலமும் மீட்பு!

Date:

வவுணதீவு இருந்து மட்டக்களப்பு நகருக்கு இரண்டரை வயது குழந்தையுடன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை சென்று காணாமல் போன இளம் தாய் ஒருவர் தாந்தாமலை நெல்லிகாடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்தும் குழந்தை வவுணதீவு கொத்தியாவலை பிரதேச வயலில் இருந்து உயிருக்கு போராடிய நிலையில் உயிருடன் நேற்று வெள்ளிக்கிழமை (20) மீட்கப்பட்டதுடன் அந்த கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பெரும் பரப்பு ஏற்பட்டுள்ளது

இது பற்றி தெரியவருவதாவது

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கொத்தியாவலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளம் தாய் ஒருவர் அவரது இரண்டரை வயது குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சலுக்கு மருந்து எடுப்பதற்காக நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலையில் வீட்டில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்றவர் இரவாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் அவரை தேடிவந்ததுடன் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாந்தாமலை நெல்லிக்காடு பகுதியில்; மாட்டுபட்டியில் பால் எடுப்பதற்காக சிலர் சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் பிரதேசத்தில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து அலறல் சத்தம் கேட்டதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது பெண் ஒருவர் கழுத்தளவு நீரில் உயிருக்காக போராடிக் கொண்டிருப்பதை கண்டனர்.

இதனையடுத்து பொலிசாருக்கு அறிவித்ததையடுத்து பெண்ணை மீட்ட போது, அவர் கிணற்றில் அழுகிய நிலையில் சடலங்கள் இருப்பதாக தெரிவித்த நிலையில் அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதேவேளை அவரது குழந்தை கொத்தியாவலையில் உள்ள அவரது வீட்டில் இருந்;து சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் கொண்ட வயல் பகுதியில் கைவிடப்பட்டு அழுது கொண்டிருந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் குழந்தை மீட்கப்பட்ட பகுதியில் இருந்து சுமார் 25 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பகுதி கிணற்றில் இருந்து தாய் மீட்கப்பட்டதையடுத்து மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பொலிசார் நீதிமன்ற அனுமதியை பெற்று தடயவியல் பிரிவு பொலிசார் வரவழைக்கப்பட்டு கிணற்றில் இருந்த அழுகிய நிலையில் இருந்த சுமார் 20 வயதுக்கு உட்பட்ட பெண் ஒருவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதணைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்தனர்.

இதேவேளை இச் சம்பவத்தில் உயிர் தப்பிய தாய், தான் மட்டு போதனா வைத்தியசாலைக்கு சென்று மருந்து எடுத்து கொண்டு ஈட்டு கடையில் 34 ஆயிரம் ரூபாவுக்கு அடைவில் இருந்த தங்க ஆபரணம் ஒன்றை மீட்டெடுத்துக் கொண்டு பஸ்வண்டியில் ஏறி வவுணதீவு கொத்தியாவலையில் உள்ள தனது வீட்டிற்கு பிரயாணித்து தாண்டியடி பகுதியில் பஸ்வண்டியில் இருந்து இறங்கி வீடு நோக்கி சென்றதாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என தெரியவில்லையென பொலிசாரின் ஆரம்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேவேளை இச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட அவர் பெரும் அதிர்சியடைந்து பயந்த நிலையில் இருந்து வருவதால் அவரிடம் தொடர்ந்து தற்போது விசாரணை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த இளம் தாய் கடத்தப்பட்டாரா? கொள்ளையர்கள் வாகனத்தில் கடத்தி சென்றனரா? தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதா? என பல கோணத்தில் கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, பொலிசார், மாவட்ட புலனாய்வு பிரிவினர், விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-கனகராசா சரவணன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க படையை ஈரானுக்குள் நிறுத்தம் திட்டங்களை சமர்ப்பித்த மூத்த அதிகாரிகள்!

அமெரிக்கத் தரைப்படைகளை ஈரானுக்குள் நிலைநிறுத்துவது குறித்த விரிவான திட்டங்களை மூத்த அமெரிக்க...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி...

ஈரானுடன் பேசலாம்… ஆனால் உடனடி போர் நிறுத்தம் சாத்தியமில்லை; ட்ரம்ப்

ஈரானுடன் போர் நிறுத்தம் வேண்டாம் என்றும், அமெரிக்க இராணுவம் ஈரானிய ஆட்சியை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்