2026 ஒஸ்கர் விருதுகள்

Date:

அமெரிக்​கா​வின் லொஸ் ஏஞ்​சல்​ஸில் 98வது ஒஸ்கர் விருது விழா கோலாகல​மாக இன்று காலை நடைபெற்றது. உலகம் முழு​வதும் உள்ள திரைக்​ கலைஞர்கள் இந்த விருது அறி​விப்​பை​யும் விழாவை​யும் ஆவலுடன் எதிர்​நோக்கி இருந்தனர். இந்த விழாவில் ஆஸ்கர் விருதை வென்றவர்கள் குறித்து பார்ப்போம்.

இதில் ரியான் கூக்​லர் இயக்​கிய ஹாலிவுட் படமான ‘சின்​னர்​ஸ்’ திரைப்படம் 16 பிரிவுகளில் பரிந்​துரைகளைப் பெற்று சாதனை படைத்தது. இதன் மூலம் அகாடமி விருது வரலாற்​றில் அதிக பரிந்​துரைகளைப் பெற்​ற​தாக இப்​படம் மாறி​யுள்​ளது. இதற்கு முன்பு ஒஸ்கர் வரலாற்றில் அதிகபட்சமாக ஒரு படம் 14 பிரிவு பரிந்துரைகளில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. ‘ஓல் அபவுட் ஈவ்’ (1950), ‘டைட்​டானிக்’ (1997), ‘லா லா லேண்ட்​’ (2016) ஆகிய படங்கள் 14 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.

98வது ஒஸ்கர் விருது வெற்றியாளர்கள் யார் யார்?

சிறந்த படம் – ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் (One Battle After Another)

சிறந்த நடிகர் – மைக்கேல் பி ஜோர்டான் – படம்: சின்னர்ஸ்

சிறந்த துணை நடிகர் – ஷான் பென் – படம்: ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்

சிறந்த நடிகை – ஜெஸ்ஸி பக்லி – படம்: ஹேம்நெட்

சிறந்த துணை நடிகை – ஏமி மடிகன் – படம்: வெப்பன்ஸ்

சிறந்த இயக்குநர் – பால் தாமஸ் ஆண்டர்சன் – படம்: ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்

சிறந்த அனிமேஷன் படம் – கே.பாப் டிமன் ஹன்டர்ஸ்

சிறந்த அனிமேஷன் குறும்படம் – The Girl Who Cried Pearsl

சிறந்த கேஸ்ட்டிங் – காசண்ட்ரா குலுகுண்டிஸ் – படம்: ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்

சிறந்த ஒளிப்பதிவு – ஆட்டம் டுரால்ட் ஆர்காபா – படம்: சின்னர்ஸ்

சிறந்த ஆடை வடிவமைப்பு – கேட் ஹாவ்லி – படம்: ஃபிராங்கன்ஸ்டைன்

சிறந்த ஆவணப்படம் – Mr. Nobody Against Putin

சிறந்த ஆவண குறும்படம் – All The Empty Rooms

சிறந்த படத்தொகுப்பு – ஆண்டி ஜர்கென்சென் – படம்: ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்

சிறந்த சர்வதேச திரைப்படம் – சென்டிமென்டல் வேல்யூ

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் – தி சிங்கர்ஸ், Two People Exchanging Saliva

சிறந்த ஒப்பனை – மைக் ஹில், ஜோர்டான் சாமுவேல், கிளியோனா – படம்: ஃபிராங்கன்ஸ்டைன்

சிறந்த இசை: பேக்கிரவுண்ட் ஸ்கோர் – லூத்விக் கோரன்சன் – படம்: சின்னர்ஸ்

சிறந்த இசை: ஒரிஜினல் பாடல் = கோல்டன் – கே.பாப் டிமான் ஹன்டர்ஸ்

சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் – ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பேன்ஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட் – படம்: அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்

சிறந்த திரைக்கதை – ரியான் கூக்லர் – படம்: சின்னர்ஸ்

Adapted திரைக்கதை – பால் தாமஸ் ஆண்டர்சன் – படம்: ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்

spot_imgspot_img

More like this
Related

முதல் முறையாக நாடொன்றின் மீது இனப்படுகொலை நடத்தியதாக தீர்ப்பு: சர்வதேச நீதிமன்றம் வழங்கியது!

மியான்மர் தனது ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலை செய்துள்ளது என்று சர்வதேச...

நீதிமன்றில் சாட்சியமளிக்க சென்ற செயற்பாட்டாளர் மீது கொலைவெறித் தாக்குதல்: யாழில் பயங்கரம்!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் கொலை வழக்கொன்றில் சாட்சியமளிக்க சென்ற அரசியல் செயற்பாட்டாளரும்,...

16 வயதைத் திருமணத்திற்கான விருப்பத்தெரிவாக மாற்ற வேண்டும்; இலங்கை உலமா கட்சி கோரிக்கை!

நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலன்புரி மற்றும் தொடர்ச்சியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்