மட்டக்களப்பில் 55 வயது மன்மதராசாவுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Date:

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் ஒன்றுவிட்ட சகோதரியின் மகளான 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 55 வயதுடைய ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே,பிரபாகரன் கடந்த மாதம் 26ம் திகதி தீர்ப்பளித்தார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமியை கடந்த 2014ம் ஆண்டு யூன் மாதம் 21 ம் திகதி பாலியல் துஷ்பிரயேதகம் செய்த குற்றச்சாட்டில் குறித்த சிறுமியின் மாமா முறையான குறித்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்

குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் குறித்த வழக்கு கடந்த பெப்பிரவரி 26 ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது குறித்த நபர் ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் மூலம் குற்றவாளியாக கண்டறியப்பட்டதையடுத்து அவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டணையும் 25 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

-கனகராசா சரவணன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

இந்திய நீதிமன்றத்தை நாடிய இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதி

இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர், தன்னைப் பற்றிய பழைய இணையத்தள...

மீட்கப்பட்ட மாலுமிகளை திருப்பி அனுப்பக்கூடாது: இலங்கையை மிரட்டும் அமெரிக்கா!

ஈரானிய போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் தேனா மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளை...

கொச்சி துறைமுகத்தில் ஈரான் போர்க்கப்பலுக்கு இந்தியா அடைக்கலம்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்