குருநகரில் யாத்திரிகர்கள் சென்ற படகு கவிழ்ந்து 2 பேர் பலி: சிலர் மாயம்!

Date:

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் படகு ஒன்று இன்று (6) கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானவர்களில் 13 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர், மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் (2 பெண்கள் ஒரு ஆண்).

மேலும் 8 பேர் சாதாரண சிகிச்சை அறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாலைத்தீவு திருவிழாவுக்கு யாத்திரிகர்கள் சென்ற படகு ஒன்றே இன்று காலை 6 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளானது.

குறித்தப் படகில் 25 பேர் பயணித்துள்ள நிலையில், மேலும் சிலர் மீட்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இமாம் கஸ்ஸாலி வித்தியாலய மாணவர்களுக்கு அமீர் மேர்சா பொது நூலகத்தின் இலவச அங்கத்துவம் வழங்கி வைப்பு

நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலய மாணவர்களுக்கு நிந்தவூர் அமீர் மேர்சா பொது...

“அனுரவே” எம்மை சொந்த நிலங்களில் வாழவிடு – மயிலிட்டி மக்களின் 18 ஆவது வாரக் கண்ணீர்ப் போராட்டம்!

வலிகாமம் வடக்கில் பல தசாப்தங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமது சொந்தக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்