யாழில் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது!

Date:

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளதால் மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும், செயற்கைத் தட்டுபாட்டை தவிர்க்கும்மாறும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.

மேலும் காங்கேசன்துறையிலுள்ள பெற்றோல் களஞ்சியமானது வழமைபோல் ஞாயிற்றுக்கிழமை மூடப்படுவதால் சகல எரிபொருள் நிலையங்களுக்கும் நாளை மறுதினம் திங்கட்கிழமையிலிருந்து பெற்றோல் விநியோகிக்கப்படு எனவும் தெரிவித்தார்.

மேலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் டி. ஜே. ஏ. எஸ். டி. எஸ். ராஜபக்சவுடன் இன்றையதினம் தொலைபேசி மூலம் தாம் தொடர்புகொண்ட போது, நாட்டுக்குத் தேவையான ஒரு மாதத்திற்கான பெற்றோல் கையிருப்பில் இருப்பதாக தம்மிடம் தெரிவித்துள்ளார் என்பதனை அரசாங்க அதிபர் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் நெருக்கடி: அரச ஊழியர்களுக்கு புதன் கிழமைகளிலும் விடுமுறை!

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில்...

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்செல்வனுக்கு 2025-ம் ஆண்டுக்கான...

கியூபாவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது, ஈரானுக்குப் பிறகு நடவடிக்கை சாத்தியம்: டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா விரைவில் கியூபாவுடன் ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்