அம்பாறையில் திடீரென உருவான எரிபொருள் வரிசை

Date:

பாரசீக வளைகுடாவில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் அம்பாறை மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில் முண்டியடிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை ,பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, காரைதீவு ,சம்மாந்துறை ,நிந்தவூர், உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான நிலைமை தொடர்கின்றது.

இதே வேளை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடும் நெரிசல் தற்போது ஏற்பட்டு வருகின்றது.அம்பாறை மாவட்டத்தில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கட்டுப்பாடுகளுடன் எரிபொருட்கள் வழங்கப்பட்டு வருவதுடன் சில இடங்களில் இல்லை என்ற வாசகத்தினால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

மேலும் பொலிஸார் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்கள் வரிசையில் நிற்கும் போது போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக என்றுமில்லாதளவில் நீண்ட வரிசைகளில் மக்கள் முண்டியடிக்க ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட சமயங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நின்ற வரிசைகளை விட தற்போதே நீளமான வரிசைகளில் மக்கள் நிற்பதை அவதானிக்க முடிகிறது.

மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ வாகனங்களையே அதிகமாக பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காணப்பட்டது.

இதேநேரம் டீசலை பெற்றுக்கொள்ளும் பொருட்டும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் காத்திருந்தன.

-பாறுக் ஷிஹான்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

இந்துக்கள் அல்லாதவர்கள் இந்த கோயிலுக்குள் நுழைவதென்றால் பசு சாணம், சிறுநீர் உட்கொள்ள வேண்டும்!

உத்​த​ராகண்​டில் சார் தாம் யாத்​திரை தொடங்​கி​யுள்ள நிலை​யில், இந்து அல்​லாதவர்​கள் கோயிலுக்​குள்...

ஆசிய கடற்பரப்பில் 3 ஈரானிய கப்பல்களை இடைமறித்துள்ள அமெரிக்க கடற்படை

ஆசியக் கடற்பரப்பில் ஈரான் கொடியுடன் சென்ற குறைந்தது மூன்று எண்ணெய்க் கப்பல்களை...

காணாமல் போன 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து நிதி அமைச்சகமும், மத்திய வங்கியும் ஏன் மௌனம் காக்கின்றன?: ஹர்ஷ கேள்வி

பொது நிதிக்கு அரசியலமைப்பு ரீதியாகப் பாராளுமன்றமே பொறுப்பு என்று கூறி, பொது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்