மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கேஜ்ரிவால், சிசோடியா விடுவிப்பு

Date:

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

டெல்லியில் முந்தைய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியின் போது அரசு அறிமுகம் செய்த புதிய மதுபான கொள்கையில் (2022) முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்தது.

இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர். இந்தச் சூழலில் சிபிஐ விசாரித்த வழக்கில் இருந்து அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் சுமார் நூறு கோடி ரூபாய் முறைகேடு நடந்து இருப்பதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் கேஜ்ரிவால் தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர் என்.ஹரிஹரன் தனது வாதத்தை எடுத்து வைத்தார். வழக்கு தொடர்பான வாதங்கள் முடிந்த நிலையில் டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

இதில் கேஜ்ரிவால், சிசோடியா மற்றும் இதில் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட 21 பேரை விடுவித்தது. இந்த தீர்ப்பு டெல்லி அரசியல் வட்டாரத்தில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...

போதைப்பொருளுடன் சிக்கிய மீன்பிடி படகு

தெற்கு கடலில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, ​​பெருமளவு போதைப்பொருட்களை...

ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் நாசமாகிறது: ட்ரம்பை மறைமுகமாக சாடிய போப்!

போர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழிக்கும் தலைவர்களை போப் கடுமையாகச் சாடியதோடு, "ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்