புங்குடுதீவு பேருந்து உரிமையாளர் கொலை: மற்றொரு சந்தேகநபர் கைது!

Date:

புங்குடுதீவில் கடந்த 2025 ஓகஸ்ட் மாதம் தனியார் பேருந்து உரிமையாளர் அகிலன் என்பவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் நேற்று (21) ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, இந்தக் கொலைக் கும்பலின் பிரதான சந்தேகநபரான அனலைதீவைச் சேர்ந்த நபர் கடந்த செப்ரெம்பர் 14 ஆம் திகதியன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், சுமார் 5 மாதங்களின் பின்னர் புங்குடுதீவைச் சேர்ந்த மற்றுமொரு நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்தக் கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் வெளிநாடொன்றுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

சிறைகளில் மதத் தலைவர்களின் நிலைகண்டு வெம்பியிருக்கிறேன் – அநுர ஜனாதிபதிக்கு நினைவுபடுத்திய டக்ளஸ்

அனைத்து மதங்களின் தலைவர்களும் சிறைச்சாலைகளில் கௌரவமாக நடாத்தப்படுவதை சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்த...

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டமை சகோதரத்துவ நம்பிக்கையை வலுப்படுத்துகிறது – காரைதீவு தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு...

உக்ரைன் ஆயுதங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்திய Starlink? அமெரிக்கா மீது சந்தேகம்!

உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் Starlink இணையச் சேவையில் விதிக்கப்பட்ட வேகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்