வீட்டின் கூரைக்குள்ளிருந்த 118 தோட்டாக்கள்

Date:

வீட்டைப் பழுதுபார்க்கும் போது ஓடுகளுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 118 தோட்டாக்களை பாணமை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பாணமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றினை பழுது பார்க்கும் போது ஓடுகளின் கீழ் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5.56x 45mm வகையை சேர்ந்த 118 வகையான தோட்டாக்கள் பாணமை இன்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வீட்டின் உரிமையாளர் தற்போது கொழும்பில் வசிப்பதோடு தனது சகோதரரிடம் குறித்த வீட்டினை பழுதுபார்க்கும் பணியை ஒப்படைத்திருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டாரவின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்தநாராயண, பாணமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

-பாறுக் ஷிஹான்-

spot_imgspot_img

More like this
Related

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்...

நேபாளை உலுக்கிய பேரழிவு: 162 பேர் பலி; 400க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளில் பேரழிவு: 162 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மாயம் நேபாளத்தின் வடக்குப் பகுதியில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்