மட்டக்களப்பு மாநகர சபைக்கு வருமானம் ஈட்டி தருவதற்கான போக்குவரத்து சேவை ஒன்றின் அனுமதியை பெற்று தந்த மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் அமைச்சருமான சுனில் ஹிந்தி நேத்திக்கு இன்று வியாழக்கிழமை (08) இடம்பெற்ற மாநகர சபை அமர்வில் முதல்வர் மற்றும் சபை உறுப்பினர்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
மாநகரசபையின் 8 வது சபையின் 11 அமர்வு இன்று வியாழக்கிழமை (08) மாநகரசபை முதல்வர் சிவப்பாக்கிய நான் தலைமையில் காலை 9.30 மணிக்கு சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது மாநகரசபை முதல்வர் விடுத்த லிசேட அறிவிப்பில், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் அமைச்சருமான சனில் ஹந்திநெத்தியடம் மட்டு மாநகர சபையால் மட்டக்களப்பு கொழும்புக்கான பஸ் சேவை ஒன்றை நடத்துவதற்கான போக்குவரத்து அனுமதியை பெற்றுத் தருமாறு கடந்த பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார் என்றார்.
இதற்கமைய அமைச்சர் குறித்த பஸ் போக்குவரத்து சேவைக்கான அனுமதியை பெற்று கொடுத்து அதன் அனுமதியை அனுப்பியுள்ளார் எனவே அவருக்கு நன்றிகள் என மாநகர சபை முதல்வர் தெரிவித்ததையடுத்து உறுப்பினர்களும் என மனதாக அவருக்கு நன்றிகள் தெரிவித்தனா்.
-கனகராசா சரவணன்-



