சத்தமின்றி உருவாகும் பாண்டிராஜின் புதிய படம்

Date:

சென்னையில் சத்தமின்றி புதிய படமொன்றை இயக்கி வருகிறார் பாண்டிராஜ்.

’தலைவன் தலைவி’ படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்துக்காக பல்வேறு நாயகர்களை அணுகினார் பாண்டிராஜ். ஆனால், பலரும் அடுத்டுத்து படங்களில் நடித்து வந்தார்கள். இதனால் சத்தமின்றி புதிய படமொன்றை தொடங்கிவிட்டார். இதில் ஜெயராம் மற்றும் ஊர்வசி ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

குறைந்த பொருட்செலவில் குடும்ப பின்னணியில் உருவாகும் கதையாக இதனை இயக்கி வருகிறார். இதன் முழுப்படப்பிடிப்பையும் சென்னையில் ஒரே கட்டமாகவும் முடிக்க திட்டமிட்டுள்ளார். இதன் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ் பணிபுரிந்து வருகிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் யார் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இப்படத்தினை முடித்துவிட்டு அடுத்ததாக பெரிய நாயகர்கள் படமொன்றை இயக்க முடிவு செய்திருக்கிறார் பாண்டிராஜ். இதற்கான கதை விவாதம் உள்ளிட்டவையும் ஒரு புறத்தில் கவனித்து வருகிறார். இப்படத்தினை தயாரிப்பாளர் குமார் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

காலியில் இருவர் வெட்டிக்கொலை

காலி, தெலிகட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடவில, 13 ஏக்கர் பகுதியில் இன்று...

சட்டவிரோதமாக மணல் ஏற்றிய டிப்பர்கள் சிக்கின!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான...

“இது மக்களுக்கான அரசியல் இல்லை” – விஜய்யை கடுமையாக சாடிய சேரன்

“உங்கள் கவர்ச்சி மட்டும் மக்களுக்கான அரசியல் இல்லை” என்று தவெக தலைவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்