வல்வெட்டித்துறையில் குளிக்கச் சென்ற சிறுவன் பலி

Date:

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் குளிக்கச் சென்ற சிறுவனொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நிரேக்சன் என்ற 18 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.

ஐந்து வரையான சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர். இதன்போது அனைவரும் கயிறு கட்டி நீராடியுள்ளனர். அதன் பின்னர் அனைவரும் வெளியேறிய நிலையில் ஒரு சிறுவன் மாத்திரம் தொடர்ந்து நீராடியுள்ளார்.
அவரை வருமாறு ஏனையவர்கள் அழைத்துள்ளனர். குறித்த சிறுவன் சிறிது நேரத்திற்கு பிறகு வருவதாக கூறியுள்ளார்.

நீண்ட நேரமாகியும் குறித்த சிறுவனை காணாததால் ஏனையவர்கள் மீண்டும் அங்கு சென்று பார்த்த போது கயிறு அறுந்த நிலையில் அங்கு சிறுவனை காணவில்லை.

ஏனையோரின் உதவியுடன் தோட்ட கிணற்றில் தேடியபோது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...

தையிட்டி விகாரைக்குள் சிக்கிய காணி மீட்பு விவகாரம்: 21ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்