போதைப்பொருளுடன் சிக்கிய பிள்ளையானின் மொழிபெயர்ப்பாளர் தடுப்புக்காவலில்!

Date:

மட்டக்களப்பு நகரில் ஜஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மட்டு மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் பிள்ளையானின் மொழி பெயர்பாளர் கணவனை 3 நாள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய மட்டு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று சனிக்கிழமை (8) அனுமதியளித்துள்ளார்

இது பற்றி தெரியவருவதாவது

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து ஊழல் ஒழிப்பு மற்றும் போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (07) இரவு முதலியார் வீதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்ட போது அங்கு வியாபாரத்தில் ஈடுபட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்; சி.சந்திரகாந்தனின் மொழி பெயர்பாளர், மட்டு மாநகர சபை முன்னாள் முதல்வரின் கணவரை 5 கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து அதிகாரி வீதியில் உள்ள வீடு ஒன்றில் தச்சு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கூழாவடி பகுதியைச் சேர்ந்த ஒருவரை 250 மில்லிகிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்தனர்

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது கைது செய்யப்பட்ட வியாபாரியை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் அனுமதித்தார்

அதனை தொடர்ந்து 250 மில்லிகிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட தச்சு தொழிலாளி பிணையில் விடுவித்து உத்தரவு பிறப்பித்தார்.

-க.சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் யோசனையை அரசு பரிசீலனை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான...

முதியோர் கொடுப்பனவை மீள வழங்க சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை...

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,400-ஐ கடந்தது; மீட்புப் பணிகள் தீவிரம்

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சனிக்கிழமை 1,400-ஐ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்