போதை வியாபாரிகள் இருவர் கைது!

Date:

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி, மற்றும் திருப்பெருந்துறை பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் வீடுகளை முற்றுகையிட்ட பொலிசார் பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவரை 5 கிராம் 650 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் 24 போத்தல் கசிப்புடன் ஒருவர் உட்பட இருவரை ஞாயிற்றுக்கிழமை (02) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து மட்டு தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் மற்றும் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரபாத் பெர்ணான்டோ தலைமையிலான பொலிசார் சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை இரவு கருவப்பங்கேணி பகுதியிலுள்ள போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் பிரபல போதை பொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது 34 வயதுடைய பிரபல வியாபாரியை 5 கிராம் 650 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்த போது அங்கு பெண்கள் உட்பட சிலர் ஒன்றிணைந்து கைது செய்தவரை கொண்டு செல்ல விடாது பொலிசாரை தடுத்து பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அவரை அங்கிருந்த பொலிசார் மீட்டெடுத்து கொண்டு சென்றனர்.

அதேவேளை திருப்பெருந்துறையை பகுதியில் கசிப்பு விற்பனை நிலையத்தை முற்றுகையிட்ட போது அங்கு கசிப்பு வியாபரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 56 வயதுடைய ஒருவரை 24 போத்தல் கசிப்புடன் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட போதை பொருள் வியாபாரியை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்காக நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் மற்றும் கசிப்புடன் கைது செய்தவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

-கனகராசா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்த ஒரே ஜனாதிபதி அனுரவாம்!

மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களாராமயவின் விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிழக்கு மாகாண...

வாகன, தங்க கடன்களுக்கான புதிய கடன் கட்டுப்பாடுகள்: இன்று முதல் நடைமுறை!

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்