பெற்றோல் விலை குறைந்தது!

Date:

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்வதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இந்த விலைத் திருத்தத்தின்படி, இரண்டு பிரதான எரிபொருள் வகைகளின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் லீற்றரின் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 294 ரூபாவாகும்.

அதேபோல், லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றரின் விலை 05 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 318 ரூபாவாகும்.

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றுமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி,

எரிபொருள் வகை பழைய விலை (ஒரு லீற்றர்), புதிய விலை (ஒரு லீற்றர்), விலை மாற்றம்

95 ஒக்டேன் பெற்றோல், ரூ. 335.00, ரூ. 335.00, மாற்றமில்லை.

லங்கா ஒட்டோ டீசல் , ரூ. 277. 00, ரூ. 277.00, மாற்றமில்லை.

மண்ணெண்ணெய் , ரூ. 180 .00, ரூ. 180.00, மாற்றமில்லை.

spot_imgspot_img

More like this
Related

உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்கள் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது

இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல்...

கறுப்பு யூலை: கற்காத பாடங்கள் நூல் அறிமுக நிகழ்வு

வடலி வெளியீட்டினரால் வெளியிடப்பட்ட தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்கள் எழுதிய கறுப்பு யூலை:...

யாழில் போதை நுகர்ந்த 3 பேர் சிக்கினர்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்