வடக்கு கல்வித்திணைக்களத்தின் முன் ஆசிரியர் சங்கம் போராட்டம்

Date:

இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று காலை வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறு ம், தற்போது உள்ள ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் பாகுபாடு மற்றும் பழிவாங்கல் காணப்படுவதுடன் தற்போதுள்ள அரசாங்கத்தின் கீழ் சில அதிகாரிகள் அவர்களின் சுயலாபத்துக்காகவும் அரசாங்கத்தினுடைய ஆசிரியர் தொழிற்சங்கத்தின் நன்கிழுக்காகவும் செயற்பட்டு கொண்டு உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடம் மாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என்றும், அந்த இடமாற்றங்களில் பல குறைபாடுகள் உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பில் மாகாண கல்வி பணிப்பாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலமாக அறிவித்திருந்தமை, அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து ஒரு மேல் முறையீட்டு இடமாற்ற சபையை கூட்டுமாறு கோரி இருந்த பொழுது, வடமாகாண கல்வி பணிப்பாளரும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரும் ஆசிரியர்களுக்கு மேன்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு அளிக்காமல், விண்ணப்பத்தை வலைய கல்விபிரிவும் மாகாண கல்வி பிரிவும், ஏற்றுக்கொள்ள மல், ஆசிரியர்களை கடுமையான வார்த்தைகளால் பேசியும், அவர்களை அவமதித்து பேசி அனுப்பின சம்பவங்களே இடம்பெற்று இருந்தது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தால் கொண்டுவரப்படும் மேல் முறையீடுகள் பரிசிலிக்க தயார் என்ற நிலையில், உடன்பட்டு வெளியே பணிப்பாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்ட நிலையிலும், கடிதம் அனுப்பப்பட்ட ஆசிரியர்கள் சிலரை இனங்கண்டு அரசியல் தலையிடும் மூலம் இடமாற்றம் செய்யக்கூடாது என்ற நிலைமையில், விசேட மேல்முறையீட்டு சபை ஒன்று உருவாக்கப்பட்டு, நாலு தொழிற்சங்கங்களில் ஆசிரியர்களில் 41 பேருக்கு இடமாற்றங்களில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இடமாற்ற சபைக்கு தலைமை தாங்கிய அப்போதைய மாகாண கல்வி பணிப்பாளர் தற்போது உள்ள மேலதிக கல்வி பணிப்பாளரும் பிரெட்லீ அவர்கள், ஒரு ஆசிரியருக்கு மட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுட்டு விசேட இடமாற்ற சபை கூடி இருந்த பொழுதும், தாபன விதி கோவையை மீறி போலியான, பழிவாங்கல் வேண்டுமென்ற அரசியல் லாபத்துக்காக அவர் செயற்பட்டுள்ளார் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்

வட மாகாண கல்வி திணைகளத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தற்போது வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் தமது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் தாம் ஈடுபட போவதாகவும் கருத்து தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக் கழகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாஸ்டர்ஸ் கரம் போட்டி – 2026

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக்கழகம் தனது 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு...

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்: அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசரக் கோரிக்கை

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில்இ அவர்களுக்கு இலவச...

கல்முனையில் பல்லின மதத் தலைவர்கள் கலந்து கொண்ட ஐக்கிய மீலாதுன் நபி பெருவிழா

உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் உதய தினத்தை முன்னிட்டு, கல்முனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்